Monday, March 30, 2015

உலகை உலுக்கிய சிறுமியின் புகைப்படம்

சிரியாவில் கேமராவை பார்த்து துப்பாக்கி என்று பயந்து இரு கைகளையும் தூக்கி விம்மிய சிறுமி. உலகையே உலுக்கிய புகைப்படம் இது.

பிஞ்சு முகத்தில் பயம். அழுகை வெடிக்கும் நிலை. கைகளைத் தூக்கி என்னை ஒன்றும் செய்யாதே என்று கெஞ்சும் முகபாவனை.இந்தக் காட்சியைப் படம் பிடித்த புகைப்படக் கலைஞர் நாடியா அபு ஷபான்.சிரியாவில் எப்போதும் குண்டு சத்தத்தையே கேட்டு பழகிய இக்குழந்தை, படம் பிடிக்க கேமராவை சரி செய்தபோது, துப்பாக்கியால் சுடப் போகிறார் என்று மிரண்டு கைகளை உயர்த்தி நின்ற காட்சியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இது இணையதளத்தில் பலரையும் பரிதாபப்பட வைத்துள்ளது.
                     நன்றி :- தி ஹிந்து 

செல்ஃபோன் கட்டணத்தை உயர்த்த, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முடிவு : நிமிடத்திற்கு 5 முதல் 10 பைசா வரை கட்டண உயர்வு இருக்கும் என தகவல்

செல்ஃபோன் கட்டணத்தை உயர்த்த, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிமிடத்திற்கு 5 முதல் 10 பைசா வரை கட்டண உயர்வு இருக்கும் என்றும் தெரிகிறது. 2ஜி, 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் எடுத்த நிறுவனங்கள், 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு உடனடியாக செலுத்தவேண்டி உள்ளது. இந்தத் தொகையை நாளை மறுநாளுக்குள் செலுத்தும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் கோடி ரூபாயை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்தவேண்டும். எனவே, கடன் சுமையை குறைக்க செல்ஃபோன் கட்டணத்தை உயர்த்த தனியார் தொலைத்தொடர்புத்துறை நிறுவனங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிமிடத்திற்கு 5 முதல் 10 பைசா வரை கட்டண உயர்வு இருக்கும் என்றும் தெரிகிறது. 
                        நன்றி :-ஜெயா  நியூஸ் 

ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை பொதுக்குழு

ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை பொதுக்குழு கூட்டம் இன்று மாலை கிளை தலைவர் தோழர் L தங்கதுரை தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .கிளை செயலர் தோழர் சமுத்திரம் சமர்ப்பித்த ஆய்படு பொருள் மீது விவாதம் நடைபெற்றது . ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை மகாநாட்டை ஒரு குடும்ப விழாவாகவும், மூத்த தோழர் ஆறுமுகம் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழாவாகவும் நடத்திட முடிவு செய்யப்பட்டது .அவ் விழாவிற்கு நமது அகில இந்திய உதவி பொது செயலர் தோழர் செல்லப்பா மற்றும் தமிழ் மாநில அமைப்பு செயலர் தோழியர் மல்லிகா அவர்களை அழைப்பது என முடிவு செய்யப்பட்டது .மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை சங்க செயலர்கள் பெரும் திரளில் ஊழியர்களை திரட்ட மாவட்ட சங்கம் தோழமையுடன் கேட்டு கொள்கிறது .

ஒப்பந்த ஊழியருக்கு நிலுவைத்தொகை

மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

Friday, March 27, 2015

Wednesday, March 25, 2015

இணையத்தில் ஆட்சேபத்திற்குரிய கருத்தை வெளியிட்டால் கைது செய்யும் சட்டத்தை ரத்து செய்தது இந்திய உச்ச நீதிமன்றம்

கோப்புப் படம்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கருத்து சுதந்திரம் தொடர்பான வழக்கில், சட்டப் பிரிவு 66-ஏ என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பக்கங்களில் வெளியிடப்படும் கருத்துகள், விமர்சனங்கள் அவதூறாக இருந்தால் சம்பந்தப்பட்டவரை கைது செய்ய வழிவகை செய்யும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66ஏ முறையானதுதானா என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.இந்தியாவில் சுதந்திரமாக கருத்துகளை தெரிவிக்கவும் வெளியிடவும் பேச்சுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2000-வது ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66ஏ மற்றும் அதில் 2009-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி, சுதந்திரமாக கருத்துகள் வெளியிட தடை விதிக்கப்பட்டது.இச்சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்படும் நபருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க வாய்ப்பிருந்தது.இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், "சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துகள், விமர்சனங்கள் அவதூறாக இருந்தால் தொடர்புடையவரை கைது செய்ய வழிவகை செய்யும் சட்டப் பிரிவு 66-ஏ , அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தை நேரடியாகப் பறிப்பதாகவே இது உள்ளது.
மேலும் இச்சட்டப்பிரிவில் உள்ள சில வார்த்தைகள் பொதுப்படையாக இருப்பது ஏற்புடையதல்ல. ஒருவருக்கு அவதூறாக தெரியும் விஷயம், மற்றவருக்கு அவதூறாக இல்லாமல் இருக்கலாம். எனவே இச்சட்டப்பிரிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66-ஏ ரத்தாகிறது" என நீதிபதிகள் தெரிவித்தனர்.
வழக்கு பின்னணி:
கடந்த 2012-ல், சிவசேனா முன்னாள் தலைவர் பால் தாக்கரே மறைவை அடுத்து மும்பையில் அக்கட்சியினர் நடத்திய கடையடைப்புப் போராட்டத்தை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்து வெளியிட்ட ஷாஹீன் தாதா என்ற இளம்பெண்ணும் அதற்கு விருப்பம் வெளியிட்ட அவரது தோழியும் கைது செய்யப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து, ஸ்ரேயா சிங்கால் என்ற சட்ட மாணவி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கில், கடந்த மே 2013-ல் உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், சமூக வலைத்தளங்களில் தெரிவித்த கருத்துக்காக ஒருவரை கைது செய்யும்போது ஐ.ஜி அளவிலான உயர் அதிகாரிகளை கலந்தாலோசிக்காமல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என தெரிவித்தது.தொடர்ந்து கடந்த பிப்ரவரி 26-ம் தேதி, இந்த வழக்கு நீதிபதிகள் சலமேஸ்வர், ரோஹின்டன் நரிமன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், 'தேசிய பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல் போன்ற விஷயங்களுக்கு மட்டுமே தகவல் தொழில்நுட்ப சட்டம் பயன்படுத்த முடியும். சமூக வலைதளங்களில் மாற்று கருத்துகள், விமர்சனங்களை வெளியிடுவது குற்றமல்ல. இந்திய குடிமகன் தனது அடிப்படை பேச்சுரிமையை பயன்படுத்துவதை தடுக்க முடியாது.இதை தடுக்கவும் மத்திய அரசு விரும்பவில்லை. இதற்கும் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவுகளுக்கும் தொடர்பில்லை. இருப்பினும், சட்டப் பிரிவு 66ஏ துஷ்பிரயோகம் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்துக்காக மட்டுமே அதை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என குறிப்பிட்டுவிடமுடியாது' என வாதிட்டார். அரசு தரப்பு வழக்கறிஞர் தனது இறுதி வாதத்தை நிறைவு செய்தார்.நீதிபதிகள் தரப்பில்,சட்டப்பிரிவு 66-ஏவில் சில பொதுப்படையான சட்ட வார்த்தைகள் அடங்கியுள்ளன. அவ்வாறான வார்த்தைகள் அச்சட்டப்பிரிவை தவறாக பயன்படுத்த வழிவகை செய்யும் என தெரிவித்தனர். தொடர்ந்து நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்தனர்/
                          நன்றி : தி ஹிந்து 

Monday, March 23, 2015

கொடியேற்றம்

பி எஸ் என் எல் ஊழியர் சங்க அமைப்பு தினத்தை ஒட்டி இன்று விருதுநகர் மாவட்டத்தில் அணித்து கிளைகளிலும் நமது சங்க கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது .விருதுநகரில் GM அலுவலக கிளையின் துணை தலைவர் தோழர் ராஜசேகரன் கொடியேற்றினார் .மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் நமது சங்கம் நடந்து வந்த போராட்ட பாதையால் தான் நமது நிறுவனமும் ஊழியர்களும் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்பதையும் அதன் வெளிப்பாடு தான் தொடந்து 6 சரிபார்ப்பு தேர்தலில் 5 தேர்தலில் மகத்தான நமது வெற்றி என்பதை அவர் சுட்டி காட்டினார் .இன்று மாவீரன் பகத் சிங்கின் நினைவு நாளை ஒட்டி தேச விடுதலைக்காக இன்னுயிர் ஈத்த அவரின்  தியாகம் நினைவு கூறப்பட்டது .தோழர் இளமாறன் எழுச்சி கோஷங்கள் எழுப்பிட  தோழர் சிங்காரவேலு நன்றி கூறினார் .

 

Chennai: BSNL clarifies on ad for 'recruitment' for nearly 6000 posts


State-owned BSNL on Saturday clarified that it does not have any link withadvertisements published in a section of the media under the name 'Bharat Sanchar Services' offering nearly 6,000 jobs in the state.In a statement, it noted that a company under this name and using the BSNL logo, had put out advertisements for filling up 5,842 vacancies.BSNL Tirunelveli received enquiries on the 'recruitment' for the posts, it said, adding that they do not have any connection with that firm and were not liable for the actions taken by them.

இன்று பகத் சிங் நினைவு நாள்


பகத் சிங்கின் கடைசி விருப்பம்
பகத் சிங்கின் கடைசி விருப்பத்தைக் கேட்டறிய வேண்டும் என்கிற சாக்கில் தூக்கிலிடப்படுவதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்பு பகத் சிங்கை அவரது வழக்கறிஞர் பிராணநாத் மேத்தா சந்தித்தார். சிறையறைக்குள், கூண்டில் அடைபட்ட சிங்கம்போல குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்த பகத் சிங், வழக்கறிஞரை ஒரு பெரிய புன்னகையுடன் வரவேற்று, தான் கேட்ட ‘தி ரெவெல்யுஷ்னரி லெனின்’ என்கிற புத்தகத்தைக் கொண்டுவந்தாரா என்று அவரிடம் கேட்டார்.அந்தப் புத்தகத்தைப் பற்றி ஒரு நாளிதழில் வந்திருந்த மதிப்புரையால் மிகவும் கவரப்பட்டிருந்தார் பகத் சிங். அதனாலேயே புத்தகம் கேட்டு வழக்கறிஞருக்குத் தகவல் அனுப்பியிருந்தார். புத்தகத்தை மேத்தா கொடுத்தவுடன் மகிழ்ந்துபோய் உடனே படிக்க ஆரம்பித்துவிட்டார், தனக்கு நேரம் அதிகமில்லை என்பதை உணர்ந்தவர்போல. நாட்டுக்கு எதாவது செய்தி உண்டா என்று மேத்தா கேட்டார். புத்தகத்திலிருந்து பார்வையை விலக்காமல் பகத் சிங் சொன்னார்: “இரண்டு செய்திகள், எதேச்சாதிகாரம் ஒழியட்டும். புரட்சி ஓங்கட்டும்.”
நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று மேத்தா கேட்டபோது, பகத் சிங் பதில் சொன்னார்: “மகிழ்ச்சியாக இருக்கிறேன், எப்போதும் போல.” ஏதாவது ஆசை இருக்கிறதா என்று மேத்தா கேட்டார். “ஆமாம், மீண்டும் இந்த தேசத்திலேயே பிறக்க வேண்டும். இந்த தேசத்துக்குச் சேவை செய்ய வேண்டும்,” என்றிருக்கிறார். பிறகு, மேத்தாவிடம் தனது வழக்கில் நிறைய அக்கறை காட்டிய நேருவுக்கும் சுபாஷ் சந்திர போஸுக்கும் நன்றி சொல்லும்படி பகத் சிங் சொல்லியிருக்கிறார்.பகத் சிங்கைப் பொறுத்தவரை சுதந்திர இந்தியாவுக்கான போராட்டம் என்பது அடிப்படையில் பொருளாதார முன்னேற்றத்துக்கான போராட்டமே. சுதந்திரம், முன்னேற்றத்துக்கான ஒரு வாய்ப்பை வழங்கும். வறுமையை ஒழிக்க முடியாத சுதந்திர இந்தியா வெறும் பெயரளவிலேயே சுதந்திரமாக இருக்கும். ஏற்கெனவே இருக்கும் ஒரு சூழலுக்குப் பதில் அதேபோல வேறொரு சூழலை உருவாக்குவதில் பகத் சிங்குக்கு விருப்பமில்லை.சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்திலிருந்து வந்த பகத் சிங்குக்கு சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டும் என்கிற தாகம் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால், அவர் ஜமீன்தார் பரம்பரையிலும் வந்தவர். சமூக வேறுபாடுகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டு மனிதர்களாலேயே நிரந்தரமாக்கப்பட்டிருப்பதை அவர் வாசிப்பின் மூலம் அறிந்தார். காரல் மார்க்ஸ் அவருடைய குரு.பொருளாதார அதிகாரத்தில் ஏற்படும் மாற்றமே மனித வரலாற்றின் ஏனைய மாற்றங்களுக்கான அடிப்படை என்று மார்க்ஸ் சொல்லியிருக்கிறார். பொருளாதாரச் சுதந்திரம் இல்லாத அரசியல் சுதந்திரத்தில் என்ன அர்த்தம்தான் இருக்க முடியும்? ஏழைகள் ஏழைகளாகவே இருப்பார்கள் என்றால் சுதந்திரத்துக்குதான் என்ன அர்த்தம்? பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான வித்தியாசங்கள் எப்படி முடிவுக்கு வரும்? சோஷலிசத் தத்துவங்களைத் தெரிந்துகொள்வது அவருக்குப் புதிதாக இருந்தது.பொருளாதாரப் பிரச்சினைகளின் கருவறையிலிருந்துதானே அரசியல் வரலாறு, எண்ணங்களின் வரலாறு, மதங்களின் வரலாறு உள்பட எல்லாமே பிறக்கிறது? அரசியல் பாடம் என்பது அரசியல் உண்மைகளுக்கு முன்னால் இல்லாமல் பின்னால்தான் இருக்கிறது என்கிற இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் கருத்தை முதல்முறையாகத் தீவிரமாக உணர்ந்தார் பகத் சிங். அரசியல் நடவடிக்கைகள் என்பன ஒரே ஒரு காரணத்துக்கானவை அல்ல; அவை, பொருளாதார சக்திகளால் உற்பத்திசெய்யப்படுபவை என்று மார்க்ஸ் அவரை உணர வைத்தார்.ஒரு முறை பகத் சிங், அவரது தாய் வித்யாவதி கௌருக்கு ஒரு கடிதம் எழுதினார்:“அம்மா, எனது நாடு ஒரு நாள் சுதந்திரமடைந்துவிடும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், வெள்ளைக்காரத் துரைமார்கள் விட்டுச்சென்ற நாற்காலிகளில் மாநிறத் தோல் துரைமார்கள் வந்து உட்கார்ந்துவிடுவார்கள் என்று பயமாக இருக்கிறது.”பிரிட்டிஷ் அரசின் முடிவு என்பது அதிகாரத் தலைமையின் மாற்றம் மட்டும்தான் என்றாகிவிட்டால் மக்களின் கஷ்டங்கள் அப்படியேதான் இருக்கும் என்று நம்பினார் பகத் சிங்.இன்று அது உண்மையாகி விட்டது .
                  பகத் சிங் நாமம் வாழ்க !
                  நன்றி :- தி ஹிந்து 

Sunday, March 22, 2015

சிறப்பு மாவட்ட செயற்குழு

     BSNLEU அமைப்பு தினமான இன்று திருவில்லிபுத்தூர் நகரில் நமது பி எஸ்  என் எல்  ஊழியர் சங்கத்தின் சிறப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட தலைவர் தோழர் A சமுத்திரகனி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர் R முனியசாமி மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்க நிர்வாகிகளும் இச் செயற்குழுவில் கலந்து கொண்டது சிறப்பு அம்சமாகும் . அருப்புகோட்டை மற்றும் விருதுநகர் பகுதியை சேர்ந்த ஒரு சிலரை  தவிர அனைத்து கிளை  சங்க நிர்வாகிகளும் ,மாவட்ட சங்க நிர்வாகிகளும் செயற்குழுவில் பங்கேற்றனர் .மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் சமர்ப்பித்த அறிக்கையின் மீது அனைவரும் விவாதத்தில் பங்கேற்றனர் சிறப்புரையாக நமது மாநில உதவி செயலரும் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாநில தலைவருமான தோழர் முருகையா கலந்து கொண்டார் . கையெழுத்து இயக்கத்தை வெற்றிகரமாக செய்து புதிய இலக்கான 30,000/- கையெழுத்துக்களை பொது மக்களிடம் பெற்று வரும் 28-03-15 குள் மாவட்ட சங்கத்திடம் ஒப்படைக்க அவர் வலியுறுத்தினார் .ஒப்பந்த ஊழியர் சங்க சந்தா வசூலை வரும் 25-03-2015 குள் முடித்து மாநில மட்டத்துக்கு அனுப்ப வேண்டும் என அவர் கேட்டு கொண்டார் .
செயற்குழு முடிவுகள் 
1.தீண்டாமை ஒழிப்பு முன்னணி  மாவட்ட மகாநாட்டு நிதி யாக ரூபாய் 20,000/ ஐ கிளை வாரியாக கீழ்கண்டவாறு வசூல் செய்து மாவட்ட சங்கத்திடம் வரும் ஏப்ரல்  மாதம் 20 ம் தேதிக்குள் கொடுத்துவிட வேண்டும் .
1. GM (O ) கிளை , விருதுநகர் -------- 3000
2. SDOP கிளை ,விருதுநகர்------------- 3000
3. SDOP  கிளை சிவகாசி ---------------- 3000
4.OCB  கிளை , சிவகாசி ----------------- 3000
5.சாத்தூர் கிளை --------------------------- 2000
6.அருப்புகோட்டை கிளை ----------- 2000
7. ராஜபாளையம் கிளை -------------- 2000
8.ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை ------------ 2000  
2. ஒப்பந்த ஊழியர் மாவட்ட மகாநாட்டை வரும் ஜூலை மாதம் நடத்துவது .அதற்கு முன்பாக அச் சங்கத்தின் மாவட்ட செயற்குழுவை விரைவில் நடத்துவது .
3. ஒப்பந்த ஊழியர் சம்பள  பிரச்சனைக்கு Labour Enforcement officer அவர்களுக்கு innovative நிறுவனம் Labour Enforcement officer  க்கு கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றாததை நினைவூட்டி கடிதம் எழுதுவது .
4. மாவட்ட சங்க நிதியாக வரும் ஜூன் மாதம் உறுப்பினர்கள் அனைவரிடமும் ரூபாய் 100/- வசூல் செய்வது .
5.ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை மகாநாட்டை குடும்ப விழாவாக வரும் மே மாதம் நடத்துவது  . 
6. லாங் ஸ்டே மாறுதலில் மாறுதல் கொள்கை அடிப்படையில் நிர்வாகம் அமல்படுத்த வலியுறுத்தி நமது சங்கம்  உறுதியாக இருப்பது .
7. 4 வருடம் பணி முடித்த அனைத்து கேடருக்கும் செக்சன்  மாறுதல்களை  வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் அமல்படுத்த நிர்வாகத்தை வலியுறுத்துவது . 
8. கிளை கூட்டங்கள் நடத்தாத கிளைகள் உடனடியாக கிளை பொது குழுவை கூட்டுவது .
9. அனைத்து  கிளைகளிலும் நாளை சங்க கொடியை ஏற்றி  கொண்டாடுவது .
                     செயற்குழுவை சிறப்பாக நடத்திட உதவிகரமாகஇருந்த  ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை தோழர்கள் தோழர் சமுத்திரம் மற்றும் தங்கதுரை தலைமையை  மாவட்ட சங்கம் முழு மனதாக பாராட்டுகிறது .







Saturday, March 21, 2015

சாத்தூர் கிளை மாநாடு

சாத்தூர் பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் 11 வது கிளை மாநாடும் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் 6 வது கிளை மாநாடும் இன்று மாலை 5 மணி அளவில் சாத்தூர் தொலைபேசி நிலைய வளாகத்தில் நடைபெற்றது .கிளை தலைவர் தோழர் கனகாம்பரம் அவர்கள் தலைமையில் மாநாடு நடைபெற்றது .நமது சங்க கொடியை தோழர் கனகாம்பரம் ஏற்றிவைக்க ,தோழர் வெங்கடாசலபதி அவர்கள் அஞ்சலி தீர்மானம் வாசிக்க மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் முறையாக கிளை மகாநாட்டை தொடக்கி வைத்தார் .அவர் தம் தொடக்க உரையில் நமது BSNL நிறுவனத்தில் எத்தனையோ சங்கங்கள் இருந்த போதும் நமது சங்கம் மட்டுமே முறையாக கிளை,மாவட்ட ,மாநில ,அனைத்திந்திய மகாநாடுகளை முறையான காலவரையில் நடத்துகின்றது .தற்போது ஆளும் மத்திய அரசு தொடர்ந்து பொது துறை நிறுவனங்களை சூறையாடுகிறது . நாம் எதை உண்ணுவது என்பதை கூட இந்த அரசாங்கம் முடிவு செய்கிறது .குறிப்பாக மாட்டு இறைச்சிக்கு தடை விதித்த மகாராஷ்டிரா அரசின் செயலை சுட்டி காட்டினார் .தமிழகத்தின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் மத்திய அரசின் மக்கள் விரோத மசோதாகளுக்கு ஆதரிப்பதையும் ,ஊடக உலகத்தை மொத்தமாக வாங்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணங்களையும் அவர் தன பேச்சில் சுட்டி காட்டினார் .பெருந்துறையில் காவிரி நீரை கொளளையடிக்க கோகோ கோலா நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ள மாநில அரசு ஒரு ஏக்கர் நிலத்தை ஒரு வருடத்திற்கு    வெறும் 7 ரூபாய்க்கு என்ற அடிப்படையில் 77 ஏக்கர் நிலம் கொடுத்த அவலத்தை சுட்டி காட்டினார் . நமது நிறுவனத்தை காக்க வர உள்ள வேலை நிறுத்த போராட்டத்தை 100% வெற்றி அடைய செய்ய வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார் .மகாநாட்டை வாழ்த்தி ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் முனியசாமி ,ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி , மாவட்ட தலைவர் சமுத்திரகனி ,மாவட்ட உதவி செயலர் தோழர் முத்துசாமி ஆகியோர் பேசினர் .கிளையின் புதிய நிர்வாகிகளாக தோழர்கள் வெங்கடாசலபதி, காதர் மொய்தீன் ,கலையரசன் ஆகியோர் தலைவர் செயலர் மற்றும் பொருளாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கபட்டனர். தோழர் ஜெயச்சந்திரன் நன்றியுரை கூற மாநாடு  இனிதே நிறைவு பெற்றது . புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல வாழ்த்துக்கள் .










Friday, March 20, 2015

மாட்டு கொட்டகை வாசம் தான் இனி


மத்திய அரசு அலுவலகங்களில் இனிமேல் மாட்டு மூத்திரம்தான் பயன்படுத்த வேண்டும்: பாஜக அறிவிப்பு செய்தி படிக்க :-Click Here

bsnl-revenue-phase-7-plan   2014-15  நிதி ஆண்டில் பிஎஸ்என்எல்லின் வருவாய் ரூ. 29,000 கோடியாக இருக்கும் என நமது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் CMD அவர்கள் கூறியுள்ளார். மேலும் நமது நிறுவனத்தின் வளர்ச்சி 4 முதல் 5 சதவீதம் வரையில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். நிதி ஆண்டு 2018-19 ல் நமது நிறுவனம் இலாபத்தில் இயங்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

BSNL Eyes Rs 29,000 Cr Revenue This Year:- செய்தி படிக்க :-Click Here

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சி

bsnl-revenue-phase-7-plan   2014-15  நிதி ஆண்டில் பிஎஸ்என்எல்லின் வருவாய் ரூ. 29,000 கோடியாக இருக்கும் என நமது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் CMD அவர்கள் கூறியுள்ளார். மேலும் நமது நிறுவனத்தின் வளர்ச்சி 4 முதல் 5 சதவீதம் வரையில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். நிதி ஆண்டு 2018-19 ல் நமது நிறுவனம் இலாபத்தில் இயங்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

BSNL Eyes Rs 29,000 Cr Revenue This Year:- செய்தி படிக்க :-Click Here

Wednesday, March 18, 2015

ஆளுக்கு 10 பேரை பா.ஜ.கவில் சேர்த்தா சம்பளம்.. மாணவர்களும் சேர்க்கனும்.. டெல்லி பள்ளியின் கெடுபிடி

செய்தி படிக்க :-Click Here

கையெழுத்து இயக்கமும் சில மத்திய சங்க செய்திகளும்

மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு

           லேபர் அதிகாரியிடம்( LEO)எழுத்து   பூர்வமாக INNOVATIVE நிறுவனம் பிப்ரவரி மாத சம்பளத்தை இவ்வார இறுதிக்குள் பட்டுவாடா செய்துவிடுவோம் என ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளதால் நேற்று முதல் தொடங்கிய கேபிள் பகுதி ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது .

Tuesday, March 17, 2015

சிறப்பு மாவட்ட செயற்குழு

வரும் 22-03-2015 அன்று சிறப்பு மாவட்ட செயற்குழு ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் மாலை 2.30 மணி அளவில் மாவட்ட தலைவர் தோழர் A சமுத்திரகனி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது .மாநில உதவி செயலர் தோழர் M முருகையா அவர்கள் சிறப்புரை நிகழ்த்துகிறார் .
ஆய்படு பொருள்  
1.லாங்  ஸ்டே மாறுதல் 
2. கையெழுத்து  இயக்கம் புதிய இலக்கு 
3.ஒப்பந்த ஊழியர் சந்தா வசூல் 
4.கிளை மாநாடுகள் 
5. செக்சன் மாறுதல்கள் 
6. தலைவர் அனுமதியுடன் இன்ன பிற 

ஒப்பந்த ஊழியர் போராட்டம்

INNOVATIVE நிறுவனம் கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்தும் அன் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும்  இன்று மாவட்டம் முழுவதும் கேபிள் பகுதி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கினர் .தற்போது ஜனவரி மாத சம்பளம் மட்டும் வழங்கபட்டுள்ளது .வழங்கபட்ட ஊதியத்திலும் குறைபாடு  உள்ளது .பிப்ரவரி மாத ஊதியத்திற்கு உத்தரவாதம் கிடைக்கும் வரை நமது வேலை நிறுத்த போராட்டம் தொடரும் .................
இன்று விருதுநகர் இல் நடைபெற்ற ஆர்பாட்ட காட்சிகள் 



Monday, March 16, 2015

Ravi Shankar Prasad announces launch of BSNL’s NGN technology

  The current head of the Ministry of Communications and Information Technology, Ravi Shankar Prasad has just inaugurated BSNL’s Next Generation Network (NGN) technology that’s based on fixed line. This marks the start of a huge project that’s being undertaken by the state-owned telecommunications company.The inauguration was done by Ravi Shankar Prasad by placing a video call to RK Mishra, who happens to be the chief general manager of BSNL in the Karnataka circle. Next Generation Network or NGN basically aims to provide both fixed line and broadband services from the same telephone exchange.
Ravi Shankar Prasad
    It is currently the plan of the telecommunications body to convert a whopping 14 million telephone lines with NGN technology by the end of December, 2017. This isn’t going to be a cakewalk moreover, since the upgrading from TDM to NGN is going to take an investment of approximately Rs 1000 crore.Under the NGN umbrella, BSNL is planning to come up with close user groups ofmobile and fixed line customers all over India. Multimedia video conferencing of a large number of people at a time and the flexibility of transfer of calls from fixed to mobile and mobile to fixed are also two aspects that are being targeted by the company.

'கடைசில சரோஜாதேவி யூஸ் பண்ணின சோப்பு டப்பாதான் நமக்கா?'

      வாசகர் பக்க கட்டுரை
ATM காவலாளி: ஏனப்பா டெய்லி 2 முறை வந்து பேலன்ஸ் மட்டும் பார்த்துட்டு போற ?

தெற்குப்பட்டி ராமசாமி: "பிரதமர்  மோடி உங்கள் கணக்கில் 15 லட்சம் வரவு வைக்கப்படும்ன்னு சொன்னார்...அதனால்தான் வந்து வந்து இருக்கான்னு பார்த்து ATM CARD ஐ தேய்ச்சுட்டு போயிட்டு இருக்கேங்கய்யா...!'

இது ஜோக்குக்காக மட்டும் சொல்லப்பட்டு இருந்தால் மோடி பிரதமர் ஆகி இருக்க  முடியுமா ?

நாடாளுமன்ற தேர்தலின்போது கருப்புப் பணத்தை ஒழிப்பது பற்றி தனது பிரச்சாரங்களில் மோடி கூறியபோது, "கருப்புப் பணம் முழுதையும் ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு கொண்டு வந்து ஒவ்வொரு இந்தியரின் கணக்கிலும் ரூ.15 லட்சம் சேர்ப்போம்" என்று கூறியது பற்றி மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த நிதியமைச்சர் ஜெட்லி, "வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தின் அளவு, அதைப் பற்றிய உத்தேசக் கணிப்புகளின் அடிப்படையில் அந்தத் தொகையை ஏற்றுக் கொண்டோமேயானால், ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஏற்படும் பயன் ரூ.15 லட்சமாக இருக்கும் என்ற அடிப்படையில் எடுத்துகாட்டு கூற்றாக மட்டுமே அது கூறப்பட்டது' என்றார். 

செமெஸ்டர் அரியர் கிளியர் பண்றது எப்படி? ன்னு கேட்டா, சேரன் பட டீவீடி பாருன்னு சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார் அருண் ஜெட்லி. 

மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு மோடி  தனது பிரசாரத்தில், "வெளிநாடுகளில் 80 லட்சம் கோடி இந்திய பணம் சட்டத்திற்குப் புறம்பாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மொத்த கருப்புப் பணத்தையும் மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவோம். அதைக் கொண்டு வந்தால் இந்தியாவின் மொத்த கடனையும் அடைத்து, நாடு முழுவதையும் சிங்கப்பூர் போல மாற்றி, ஆளுக்கு கையில் மூன்று லட்சம் ரூபாய் கொடுக்க முடியும். அடுத்த முந்நூறு வருஷத்துக்கு வரியில்லாத பட்ஜெட் போடுவோம்" என்று கூறியிருந்தார். 

கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்விஸ் லீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ள தகவலில், 2006-2007 ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் கருப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இது பற்றிய ஆய்வை இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் வாஷிங்டனை சேர்ந்த சர்வதேச துப்பறியும் ஊடகவியலாளர் கூட்டமைப்பும் இணைந்து  ரகசிய ஆய்வை மேற்கொண்டன. 1195 பேரின் கருப்பு பண வங்கி கணக்குகள் பற்றிய தகவல்கள் கிடைத்தன. இவர்கள் ஏறத்தாழ சுமார் 25, 420 கோடி ரூபாய் பதுக்கி உள்ளதாக தெரிந்தது. அதில் 100 பேர் பேரின் பெயர்களும், பதுக்கிய தொகை பற்றிய விவரங்களும் தெரிந்தது. 

இதனைக்கண்டு சுதாரித்து கொண்ட மத்திய அரசு,  கடந்த  அக்டோபரில் வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தைப் பதுக்கிய 627 இந்தியர்களின் பட்டியலை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில் பாதி பேர் கணக்கில் பணமே இல்லை என பின்னர் தெரிய வந்தது. 

இந்நிலையில், கருப்பு பண நிலவரம் பற்றி மத்திய அரசு தற்போது, "வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களில் சிலர் பெயர்கள் மட்டுமே இவர்களுக்கு கிடைத்திருக்கிறது. அதுவும் நேரிடையாக அல்ல, ஜெர்மானிய அரசுக்கு எப்படியோ கிடைத்த தகவலை நம் அரசோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் பலரது கணக்குகள் சட்டப்படியானதாகவும் இருக்கக் கூடும். 

அவர்கள் எவரது பெயரையும் இவர்களால் வெளியிட முடியாது காரணம் அவர்கள் சட்டத்திற்குப் புறம்பாக பணத்தை பதுக்கியுள்ளனர் என்று நிரூபிக்கப்படும் முன்னர் அவர்களது வங்கிக் கணக்கு விபரங்களை வெளியிடுவது அவர்களது தனிநபர் உரிமையில் மூக்கை நுழைப்பதாகும்" எனக் கூறியுள்ளது. 
பதுக்கியுள்ள பணம் 80 லட்சம் கோடி என்றவர்கள், தற்போது வெறும் 14,000 கோடி மட்டுமே என்கிறார்கள். இன்னும் எவ்வளவு குறையுமோ ?

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்கள் என சொல்லலாமா...இல்லை திருநெல்வேலி அல்வாவை நன்றாக கிண்டி தருகிறார்கள் என்று சொல்லலாமா..? இல்லை 'பிதாமகன்' படத்தில் சூர்யா சொல்கிற மாதிரி " கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி சரோஜா தேவி யூஸ் பண்ணின சோப்பு டப்பா" தான் கடைசியில் நமக்கு என சொல்லலாமா?
             நன்றி :- விகடன் 

வேலை நிறுத்தம்

கேபிள் பகுதியில் வேலை செய்யும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத சம்பளம் வழங்காத INNOVATIVE நிறுவனம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் ,லேபர் ஆபிசர் உத்தரவை அமல்படுத்தாத   INNOVATIVE நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்கும் முகமாக நாளை (17-03-2015) கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் வேலைநிறுத்த போராட்டம் தொடங்க உள்ளது . 
சம்பளம் வழங்காமல் ஒப்பந்த ஊழியர்களின் அடி வயிற்றில் அடிக்கும்  INNOVATIVE நிறுவனத்தை நமது மாவட்டத்தில்  இருந்து வெளியேற்றும்  போராட்டமாக இப் போராட்டம் அமைய வேண்டும் என  பி எஸ் என் எல் ஊழியர் சங்க மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது . 

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...